உதகை, காந்தள் பகுதியில் மழையில் மூன்று வீடுகள் இடிந்து சேதம் அடைந்தது

உதகை, காந்தள். கப்பிளி கவுடர் லைன் பகுதியில் மழையில் மூன்று வீடுகள் இடிந்து சேதம் அடைந்தது. இதில் பசுவையா என்ற 81 வயது முதியவருக்கு காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.