டெங்கு விழிப்புணர்வு மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி

உதகை மாவட்ட நீதிமன்றத்தில் இன்று (08.11.2019) டெங்கு விழிப்புணர்வு மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை நீதிபதி வடமலை அவர்கள் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட சட்ட மைய நீதிபதி சுரேஷ் மற்றும் வழக்கறிஞர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.