REX மேல்நிலைப் பள்ளியின் ஆண்டு விழா

உதகை REX மேல்நிலைப் பள்ளியின் ஆண்டு விழா இன்று (22.11.2019) நடை பெற்றது. இதில் உதகை மறை மாவட்ட ஆயர் மேதகு அமல்ராஜ் அவர்கள் கலந்து கொண்டார். இதில் புதிதாக புதுப்பித்த மழலையர் பள்ளி மற்றும் கணினி ஆய்வகத்தை திறந்து வைத்து திருப்பலி நிகழ்த்தினார். உடன் மாவட்ட முதன்மை குரு கிறிஸ்டோபர், பள்ளியின் தாளாளர் பங்கு தந்தை இருதய ராஜ், பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.