கிராம ஊராட்சி தேர்தலை முன்னிட்டு அலுவலர்களுக்கான பயிற்சி முகாம்

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (03.12.2019) எதிர்வரும் கிராம ஊராட்சி தேர்தலை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா இ,ஆ,ப., அவர்கள் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி முகாமினை தொடங்கி வைத்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.எஸ்.நிர்மலா உள்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் உள்ளனர்