உதகை மாவட்ட நீதிமன்றத்தில், மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது

நீலகிரி மாவட்ட முதன்மை நீதிபதி வடமலை அவர்களின் தலைமையில் உதகை மாவட்ட நீதிமன்றத்தில் இன்று (14.12.2019) மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில் பல வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள பட்டு முடித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட சட்ட பணிக்குழு செயலாளர் சார்பு நீதிபதி சுரேஷ் குமார் மற்றும் வழக்கறிஞர்கள், மனுதாரர்கள், எதிர் மனுதாரர்கள் கலந்து கொண்டனர்.