ஐயப்பன் கோவில் தேர் திருவிழா மாவட்ட ஆட்சித் தலைவர் தேரினை வடம் பிடித்து துவக்கம்

உதனக ஸ்ரீ ஐயப்பன் கோவில் 65வது ஆண்டு தேர் திருவிழா 17.11.2019 முதல் 15.1.2020 வரை நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் பவனி இன்று (21.12.2019) நடைபெற்றது. திருத்தேரினை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஜெ. இன்ன சென்ட் திவ்யா அவர்கள் வடம் பிடித்து துவக்கி வைத்தார். முன்னதாக ஆட்சித் தலைவருக்கு பூர்ண கும்ப வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை ஏற்றுக் கொண்ட ஆட்சித் தலைவர்  கோவிலின் உள்ளே சுவாமி தரிசனம் செய்து கோயில் வலம் வந்து திருத்தேர் வடம் பிடித்தார், விழாவில் மாவட்ட முதன்மை நீதிபதி திரு வடமலை அவர்கள்,  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சசிமோகன் மற்றும் உபயதாரர்கள் பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.