உதகை தூய இருதய ஆண்டவர் பேராலயத்தில் புத்தாண்டு திருப்பலி

உலகமெங்கும் இன்று புத்தாண்டு வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்ந புத்தாண்டை வரவேற்கும் விதமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் இரவு 12 மணிக்கு திருப்பலி மற்றும் ஆராதனை நடைபெற்றது. கத்தோலிக்கத் திருச்சபையின் தந்தை போப் பிரான்சிஸ் அவர்களின் உத்தரவின் பெயரில் இந்த 2020ஆம் ஆண்டு இளைஞர்களுக்கான ஆண்டாக கடைப்பிடிக்க வேண்டும் என்றதன் பெயரில் சிறப்பு ஆராதனை மற்றும் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. குறிப்பாக இரவு 12 மணிக்கு தொடங்கிய திருப்பணி இரவு 2 மணி வரை நடைபெற்றது. உதகை மறைமாவட்டத்தின் ஆயர் அமல்ராஜ் அவர்கள் தலைமையில் தூய இருதய ஆண்டவர் பேராலயத்தில் கூட்டுத்திருப்பலி நடைபெற்றது. இந்த திருப்பலியில் இளைஞர்களுக்காக சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மேலும் புதிய ஆண்டு மக்களுக்கு நோய் நொடி இல்லாத வளம்மிக்க ஆண்டாக அமையும் பிரார்த்தனை செய்யப்பட்டது. இந்த திருப்பலியில் தூய இருதய ஆண்டவர் பங்குத்தந்தை ஸ்தனிஸ், உதவி பங்கு தந்தை பிராங்கிளின் உட்பட பங்கு தந்தையர்கள் மற்றும் இந்த திருப்பலியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்குபெற்றனர். இதே போல மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவலாயங்களிலும் புத்தாண்டு சிறப்பு திருப்பலி நடைப்பெற்றது.