உதகையில் பனிப்பொழிவு துவங்கியுள்ளது

நீலகிரி மாவட்டம் உதகையில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை பனிக்காலம் இருக்கும். ஆனால் இந்த ஆண்டு பனிக்காலம் தாமதமாக துவங்கியுள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பனிப்பொழிவு துவங்கியுள்ளது. இதன் காரனமாக கடும் குளிர் நிலவி வருகிறது. எதிர்வரும் காலங்களில் பனியின் தாக்கம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.