31வது சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு பேரணி

நீலகிரி மாவட்டம் உதகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கு துறை சார்பாக 31வது சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு இன்று (21.01.2020) சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியை நீலகிரி மாவட்ட ஆட்சி தலைவர் திருமதி. ஜெ. இன்னசென்ட் திவ்யா.இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கிவைத்து விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்கினார். இப்பேரணியில் வட்டார போக்குவரத்துக்கு அலுவலர், அரசு அலுவலர்கள், கல்லூரி மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.