தேயிலை வாரியத்தின் மேம்பாட்டிற்காக பல்வேறு நடவடிக்கைகள்

நீலகிரி மாவட்டம் உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் இன்று (20.02.2020) இந்திய தேயிலை வாரியம் சார்பில், தேயிலை வாரியத்தின் தேநீர் மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா,இ.ஆ.ப.. அவர்கள் முன்னிலையில், இந்திய தேயிலை வாரிய செயல் இயக்குநர் திரு.எம்.பாலாஜி,இ.ஆ.ப., அவர்கள் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.
நீலகிரி மாவட்டம் உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் இன்று (20.02.2020) இந்திய தேயிலை வாரியம் சார்பில், தேயிலை வாரியத்தின் தேநீர் மையத்தினை மாவட்ட ஆட்சிதலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா,இ.ஆ.ப.. அவர்கள் முன்னிலையில், இந்திய தேயிலை வாரிய செயல் இயக்குநர் திரு.எம்.பாலாஜி,இ.ஆ.ப., அவர்கள் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்து கூறியதாவது,
தென் இந்திய தேயிலை வாரியம் தேயிலை வாரியத்தின் மேம்பாட்டிற்காக பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றது. குறிப்பாக, தனிநபர் அருந்தும் தேநீர் அளவை கணிசமான அளவு அதிகரிக்கும் நோக்கில், கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களிடையே பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றது.
இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டத்தில் தயாரிக்கப்படும் சிறப்பு வகையான ஸ்பெஷாலிட்டி தேயிலை தூள்களை நீலகிரி மாவட்டத்திற்கு வருகை புரியும் சுற்றுலா பயணிகளிடையே பிரபலப்படுத்தும் நோக்கில் தென் இந்திய தேயிலை வாரியம் உதகையில் உள்ள மலைப்பகுதி மேம்பாட்டு திட்டம் பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் தேநீர் மையத்தை செயல்படுத்தப்பட உள்ளது.
இந்த தேநீர் மையத்தில் நீலகிரி மாவட்டத்திலுள்ள சிறு தேயிலை விவசாயிகளால் தயாரிக்கப்படும் சிறப்பு வகையான தேயிலை தூள்களை சுற்றுலா பயணிகளிடையே பிரபலப்படுத்தும் நோக்கில் துவக்கப்பட்டுள்ளது. இந்த தேநீர் மையத்தில் சிறப்பு தேயிலை தூள்கள் விற்பனைக்காகவும், தேநீர் சுவைக்கும் வகையிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.குறிப்பாக நீலகிரி மாவட்டத்திலுள்ள இளைஞர்களிடையே வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் வகையிலும், தேநீர் சுவை பார்த்தல் பயிற்சிகளை தேயிலை வாரியம் மூலமாக நடத்தி வேலையற்ற சிறு தேயிலை விவசாய இளைஞர்களிடையே புதிய தொழில் முனையும் நோக்கில் இந்த தேநீர் மையம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த தேநீர் மையம் தேயிலை வாரியத்தின் தொழில் நுட்ப உதவியுடனும் சிறு தேயிலை விவசாயிகளை தரமான மதிப்பு கூட்டப்பட்ட ஸ்பெஷாலிட்டி தேயிலைத் தூள் தயாரித்தலில் ஈடுபட முன்வர வேண்டும் என்ற நோக்கிலும், இளைஞர்களிடையே ஓர் புதிய தொழில் முனைப்பை ஏற்படுத்தும் நோக்கிலும் பாரத பிரதமரின் வேலை வாய்ப்பு திட்டத்தில் வங்கிகளின் மூலம் கடன் பெற்று இளைஞர்களால் செயல்பட உள்ளது என இந்திய தேயிலை வாரிய செயல் இயக்குநர் அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர், சிறப்புபகுதி மேம்பாட்டு திட்டம் திருமதி. கே.எம்.சரயு,இ.ஆ.ப., அவர்கள் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்