குற்ற சம்பவங்களை தடுக்க நடவடிக்கை

நீலகிரி மாவட்டம் உதகை நகர உட்கோட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கவும் சந்தேக நபர்களை கண்காணிக்கவும் குற்ற தடுப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக CCTV கேமராக்கள் காந்தள் ரோகினி சந்திப்பிலிருந்து முக்கோணம் வரை புறநகர் வியாபாரிகள் சங்கம் சார்பாகவும் மற்றும் பொது மக்கள் ஒத்துழைப்போடும் 25 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கபட்டு உதகை நகர மேற்கு காவல் நிலையத்திலிருந்து கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Nilgiris District Police கண்காணிப்பு அறையை இன்று (13.03.2020) நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.சசிமோகன் அவர்கள் துவக்கி வைத்தார். உடன் கூடுதல் காவல் கண்காணிப்பாளர், நகர துணை காவல் கண்காணிப்பாளர், நகர மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் காவல் துறையினர், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்