கொரோனா வைரஸ் நோய் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (18.03.2020) மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஜெ.இன்னசென்ட் திவ்யா இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுகாதாரத்துறையின் சார்பில் தெர்மல் ஸ்கேனர் மூலம் பொதுமக்களுக்கு காய்ச்சல் உள்ளதா என சோதனை செய்தனர். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.வி.சசிமோகன்.இ.கா.ப., உள்ளார்