கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நிவாரண தொகையை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நிவாரண தொகை ரூ.1000/- ரொக்கம் மற்றும் விலையில்லா அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை நீலகிரி மாவட்டம் உதகை காந்தள் பகுதி நியாவிலைக்கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இன்று (2.4.2020) நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ஜெ.இன்னசென்ட் திவ்யா இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.