தன்னார்வல தொண்டர்கள் தனிமைபடுத்தப்பட்ட பகுதிக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்கள்

உதகை காந்தள் அருள்மிகு ஸ்ரீ மூவுலகரசி அம்மன் ஆலய வழிபாட்டு குழுவின் தன்னாவல தொண்டர்கள் குழுவின் ஒருங்கிணைப்பாளர்கள் பாலகுமார், ரிகிருஷ்ணன், சுரேஷ் ஆகியோர் தலைமையில் தன்னார்வல தொண்டர்கள் குமரவேல், மணிகண்டன், மணிமாறன்,hசன், செல்வகுமார், கோவிந்தன், நரேஷ், லோகேஷ் ஆகியோர் தனிமைபடுத்தப்பட்டுள்ள காந்தள் பகுதியில் வருமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்கள்.

மேலும் ஜார்கண்ட் மாநிலத்தை சார்ந்த 13 பேருக்கு இலவச அரிசி காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களை வழங்கினார்கள். மேலும் காந்தள் பகுதி பொதுமக்கள் அனைவருக்கும் கபசுர குடிநீர் வழங்கினார்கள்.