தற்காலிக காய்கறி சந்தைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள காய்கறி சந்தைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா,இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில், நீலகிரி மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள மண்டல சிறப்பு கண்காணிப்புக் குழு மற்றும் முதன்மைச் செயலாளர் /தலைவர் நிர்வாக இயக்குநர் வெளிநாட்டு மனித வள நிறுவனம், சென்னை திரு.குமார் ஜெயந்த்,இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.