மதபோதகர் போக்சோவில் கைது – உதகையில் பரபரப்பு

மதபோதகர் போக்சோவில் கைது !

நீலகிரிமாவட்டம் உதகை பிங்கர்போஸ்ட் பகுதியில் ஜெபக்கூடம் சர்ச் நடத்திவருபவர் சூர்ய மூர்த்தி என்கிற சூரி ஸ்டீபன். மதம் சார்ந்த உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றையும் நடத்திவருகிறார்.

இவருக்கு மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் 13 வயதான தனது உறவுக்கார சிறுமிக்கு பாலியல்தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து சிறுமி தனது தாயிடம் கூறியதையடுத்து சிறுமியின் தாயார் உதகை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை விசாரித்த காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து சூரி ஸ்டீபனை கைது செய்தனர்.

மதபோதகர் ஒருவர் சிறுமியிடம் சில்மிஷம் செய்து கைதாகியிருப்பது உதகையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.