ABOUT US

About Us

ராகம் தொலைக்காட்சி. . . மக்களின் எண்ண அலைகளாய் நீலமலையின் புதிய ஸ்சுருதியில். . .நீலகிரி மக்களின் நன் மதிப்பை பெற்றதொலைக்காட்சி. இது 2005ம் வருடம் டிசம்பர் மாதம் 14ம் தேதி இனிதே ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பவிழா நிகழ்ச்சியில் கட்சி பாகுபாடில்லாமல் அனைத்து கட்சி பிரமுகர்களும்ää அரசுத்துறை அதிகாரரிகளும் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். ஆரம்ப நாள் அன்று காலை முதல் மாலை வரை விழா அரங்கத்திலிருந்து நிகழ்ச்சிகளை நேரலையாக ஒளிப்பரப்பு செய்யப்பட்டது அன்றைய காலகட்டத்தின் சிறப்பு என கருதுகிறோம்.

ஒளிப்பரப்பு தொடங்கிய நாள் முதல் இன்றுவரை ராகம்தொலைக்காட்சி பொழுது போக்கு அம்சங்களுடன் பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் பல சமூக சேவை நிகழ்ச்சிகளையும் ஒளிப்பரப்புவது மட்டுமல்லாமல் களப்பணிகளும் செய்து வருகிறது. அதில் முக்கிய நிகழ்வாக நாங்கள் குறிப்பிட விரும்புவது : 2009 ­ல் நீலகிரி மாவட்டத்தை சூரையாடிய மழை வெள்ளம். அதிகமான சேதங்கள் ஏற்பட்ட அந்த நிகழ்வில் பல உயிர்கள் பறிபோயின.

அந்த நேரங்களில் ராகம் தொலைக்காட்சி ஒவ்வொரு இடமாக நேரில் சென்று ஒளிப்பதிவு செய்ததுடன் மக்களுக்கு வேண்டிய நிவாரண உதவிகளை உணவு முதல் கொண்டு உடனடியாக முதலில் வழங்கியது ராகம் தொலைக்காட்சி. மேலும் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து அனைத்து நிவாரண பணிகளிலும் தன்னை இணைத்துக்கொண்டது. இன்று வரையில் மக்களுக்கும் அரசு பிரதிநிகள்ää அதிகாரிகளுக்கு பாலமாகவே செயல்பட்டு வருகிறது.

நீலகிரி மாவட்ட ஆட்சியராக திருமதி சுப்ரியா சாகு இ.ஆ.ப. அவர்கள் பணியாற்றிய போது நேஷனல் டிரஸ்ட் அமைப்பின் மூலம் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளின் காப்பகத்திற்கு ஆறு வருடங்கள் தினசரி உணவை பொதுமக்களின் உதவியோடு வழங்கி அவர்களின் ஏனைய தேவைகளையும் பூர்த்தி செய்து பராமரித்து வந்துள்ளது.

நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவராக திரு.விஜயகுமார் இ.ஆ.ப. அவர்கள் பணியாற்றிய போது இக்காப்பகத்திற்கு தேசிய விருது வழங்கபட்டது. அதன் ஒரு அங்கம் ராகம் தொலைக்காட்சி என்பதில் பெருமை கொள்கிறோம். நீலகிரி மாவட்ட ஆட்சியரின் தலைமையில் செயல்பட்ட இக்காப்பகம் இப்போது ரோட்டரி ஆசியா என்ற அமைப்பிடம் ஓப்படைக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது.

உதகை தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனையுடன் இணைந்து இன்றும் மாதத்தில் முதல் ஞாயிற்றுக்கிழமை இலவச கண்பரிசோதனை முகாம் பொதுமக்களுக்காக ராகம் தொலைக்காட்சி வளாகத்திலேயே நடத்தப்பட்டு வருகிறது. இதில் தேவை அறிந்து ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக கண் அறுவை சிகிச்சையும் தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனையில் செய்யப்படுகிறது.

ஆண்டுதோறும் நீலகிரி மாவட்ட மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் கோவை ஓமேகா ஈவென்ட்ஸ் அமைப்பின் மூலம் கல்வி கண்காட்சி நடத்தப்படுகிறது. இதில் 50க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் பங்குகொள்கின்றன. மேலும் ரசாங்கத்தின் அறிவிப்புகள் நலத்திடங்கள் மற்றும் பொதுமக்களுக்கு பயன்படும் அனைத்து நிகழ்வுகளையும் உடனடியாக மக்களை சென்றடைய அக்கரையுடன் யாதொரு எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் செயல்படும் தொலைக்காட்சி ராகம் தொலைக்காட்சி என்பதில் நாங்கள் மகிழ்ச்சி கொள்கிறோம்.