காவல்துறையில் இருக்கும் பொது மக்களுக்கும் இடையே நல்லுறவை வளர்க்கும் வகையில் ஊரை தேடி காவலர் என்ற புதிய திட்டத்தை நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா அவர்கள் சில தினங்களுக்கு முன்பு உதவையும் துவக்கி வைத்தார். இந்த திட்டத்தில் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சிக்கு உட்பட்ட 33 வது வார்டு தலையாட்டுமந்து பகுதியில் ஊரை தேடி காவலர் என்ற திட்டம் துவங்கப்பட்டது.

https://youtu.be/LDu-bBgXSow

நிகழ்ச்சியில் உதகை நகர காவல் துணை கண்காணிப்பாளர் நவீன் குமார் T1 காவல் ஆய்வாளர் முரளிதரன் 33 வது வார்டு நகர மன்ற உறுப்பினர் சகுந்தலா ராஜேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து இந்த திட்டத்தின் நோக்கமான அந்தந்த கிராமங்களுக்கும் தலா ஒரு போலீசார நியமித்து அந்த போலீசார் வாரம் ஒரு முறை அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட கிராமங்களுக்கு சென்று அந்தந்த கிராம மக்களின் குறைகளை கேட்டு அறிந்து அவர்களது கோரிக்கைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பார்வைக்கு எடுத்து செல்லப்படும் என தெரிவிக்கப்பட்டது