சுற்றுலாத்துறை மற்றும் தோட்டக்கலைத் துறை சார்பில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் விழா நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நடைபெற்றது.
விழாவில் நீலகிரி மாவட்ட ஆட்சி தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு அவர்கள் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி பொங்கல் விழாவை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து மண் பானைகளில் வைக்கப்பட்ட பொங்கல் பொங்கிய உடன், பூங்கா பணியாளர்கள், சுற்றுலாப் பயணிகளோடு பொங்கலோ, பொங்கல் என்று கோஷமிட்டு வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்
அதனைத் தொடர்ந்து பூங்காவுக்கு வந்த வெளிமாநில, வெளி மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகளுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது.
மேலும் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த பழங்குடியின மக்கள் தங்கள் பாரம்பரிய நடனம் ஆடி சுற்றுலா பயணிகளை கவர்ந்தனர்.
தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் உறியடி போட்டியில் கலந்துகொண்டு முதல் உரியை அடித்து போட்டியை துவக்கி வைத்தார் . மேலும் நாட்டுபுற கலைஞர்களின் கண்கவரும் நடன நிகழ்ச்சிகள் மற்றும் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
சுற்றுலா பயணிகள் மற்றும் பூங்கா பணியாளர்களுக்கு லெமன் ஸ்பூன் போட்டி, கயிறு இழுக்கும் போட்டிகள் நடைபெற்றது.