ஊட்டியிலிருந்து சென்ற பேரூந்தும் - மேட்டுப்பாளையத்திலிருந்து வந்துக் கொண்டிருந்த கேஸ் சிலிண்டர்கள் ஏற்றி வந்த மினி லாரியும் காட்டேரி அருகே 3வது கொண்டை ஊசி வளைவில் ஒன்றை ஒன்று உரசிக் கொண்டு விபத்து. இதில் மினி லாரி ஓட்டுனர் கண்ணயர்த்துவிட்டதாக கூறப்பட்டதும்.
இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் விசாரணை நடத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.
இந்த விபத்தால் அச்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.