மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (27.2.2025) தலைமைச் செயலகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை மறுவாழ்வு மையத்தை கண்ணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
அதன் தொடர்ச்சியாக நீலகிரி மாவட்டம் உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையத்தை மாண்புமிகு தமிழக அரசு தலைமை கொரடா கா.ராமச்சந்திரன் அவர்கள் திறந்து வைத்து மறுவாழ்வு மையத்தின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்
நிகழ்ச்சியில் உதகை வருவாய் கோட்டாட்சியர் சதீஸ், நீலகிரி மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.எம் ராஜு, மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார், நகர செயலாளர் ஜார்ஜ், உதகை நகரமன்ற தலைவர் வாணீஸ்வரி, அரசு மருத்துவக்கல்லுரி மருத்துவமனை முதல்வர் கீதாஞ்சலி மற்றும் மருத்துவர்கள் பலர் கலந்துகொண்டனர்