நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சியில் நகரமன்ற கூட்டம் நகரமன்ற தலைவர் வாணீஸ்வரி, துணை தலைவர் ரவிக்குமார் ஆகியோர் தலைமையில் நகராட்சி ஆணையாளர் ஸ்டான்லி பாபு அவர்கள் முன்னிலையில் நடைப்பெற்றது.

https://youtu.be/sNGJY3G42pM

இதில் 36 வார்டுகளை சேர்ந்த நகரமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்களது வார்டுகளில் உள்ள அடிப்படை பிரச்சனைகள் குறித்து எடுத்துரைத்தனர்.

இக்கூட்டத்தில் பேசிய நகராட்சி ஆணையாளர் உதகை நகராட்சி சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்பும் சுற்றுலா தளமாக இருப்பதால் இங்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மாவட்ட நிர்வாத்தின் மூலம் பறவைகள் பூங்கா அமைக்கப்பட உள்ளதாகவும் அதற்கான பணிகள் விரைவில் துவங்க உள்ளதாகவும் தெரிவித்தார். 

நகரமன்ற உறுப்பினர் ஜார்ஜ் உதகை நகராட்சி மூலம் விநியோகிக்கப்படும் குடிநீர் குழாய்களில் பல்வேறு இடங்களில் ஓட்டைகள் விழுந்து இருப்பதால் முறையாக பொதுமக்களுக்கு குடிநீர் செல்வது இல்லை எனவும் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் புதிய குடிநீர் குழாய்களை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதனை தொடர்ந்து பேசிய நகரமன்ற உறுப்பினர் முஸ்தபா தற்போது மார்க்கட்டில் கட்டப்பட்டுவரும் கடைகளில் 1st phase முழுமையாக முடித்து தற்காலிக  மார்கெட்டில் வியாபாரம் செய்து வரும் வியாபாரிகளுக்கு அங்கே முன்னுரிமை அடிப்படையில் கடைகளை கொடுத்த பிறது 2nd phase பணிகளை துவங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார் 

நகரமன்ற துணை தலைவர் ரவிக்குமார் பேசும் பொழுது தற்போது கோடை சீசன் துவக்க உள்ள நிலையில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படும் என்பதால் நகராட்சிக்கு சொந்தமான சாலைகளை சுத்தம் செய்து சாலையில் உள்ள மண் திட்டுக்களை அகற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார் 

இந்த கூட்டத்தில் நகராட்சி அதிகாரிகள், நகராட்சி சுகாதார பணியாளர்கள், துப்புரவு மேற் பார்வையாளர்கள் கலந்துகொண்டனர்.