நீலகிரி மாவட்டம் உதகையில் NSPCA ஏற்பாடு செய்த விலங்குகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

https://youtu.be/RJsQ54P2VDg

உதகை மலை ரயில் நிலையம் முன்பு தொடங்கிய பேரணியில் பள்ளி மாணவர்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக சேரிங்கிராஸ் வரை விலங்குகளின் பாதுகாப்பு குறித்து கோஷங்களை எழுப்பியவாறு பேரணியாக சென்றனர்.

முன்னதாக பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா அவர்கள் NSPCA முத்திரை பதிக்கப்பட்ட டி-ஷர்ட்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். 

இப்பேரணியில் உதகை நகராட்சி ஆணையாளர் ஸ்டான்லி பாபு, நகர்நல மருத்துவ அலுவலர் சிபி, NSPCA அமைப்பினர், WVS அமைப்பினர், அரசு துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.