ஆண்டுதோறும் பிப்ரவரி 28-ஆம் தேதி தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்படுகிறது.

https://youtu.be/oA5JyKs-Wyo
 
மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தை உருவாக்கவும், ஊக்குவிக்கவும், பொதுமக்கள் அறிவியல் விழிப்புணர்வைப் பெறவுமே இத்தகைய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதையொட்டி நீலகிரி மாவட்டம், உதகை, முத்தொரையிலுள்ள வானியல் ஆய்வு மையத்தில் அமைந்துள்ள ரேடியோ வானியல் மையத்தின் சார்பில் தேசிய அறிவியல் தின விழா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

உலகின் மிகப்பெரிய ரேடியோ தொலை நோக்கிகளில் ஒன்றான, ஊட்டி ரேடியோ டெலஸ்கோப் என்ற கருவியும் அமைக்கப்பட்டுள்ளது.

டெலஸ்கோப் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியை நீலகிரி மாவட்ட ஆட்சி தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு, இஸ்ரோ துணை இயக்குனர் கிரீஷ் ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர் 

விழாவில் பேசிய இஸ்ரோ துணை இயக்குனர் எதிர் காலத்தில் தனியார் ஆராய்ச்சி  நிறுவனங்கள் மற்றும் பல்கலை கழகங்கள் வானியல்  ஆய்வில் ஈடுபடவுள்ளனர், அவர்கள் விண்வெளியில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு நிலவு உள்ளிட்ட விண்வெளி கிரகங்களுக்கு  ராக்கெட்கள் அனுப்புவார்கள் என்றும்  

மற்ற நாடுகளுக்கு இணையாக வான்வியல் ஆய்வில் இணையாக உள்ளோம் - இளைய தலைமுறையின்  ஒத்துழைப்பு இருந்தால் இஸ்ரோ இன்னும் மேலும் மேலும் உயர்வடையும் எனத் தெரிவித்தார்.

இந்த கண்காட்சியில்  நீலகிரி மாவட்டத்தில் அரசு - அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டு அறிவியல் கண்காட்சியை கண்டு ரசித்தனர்.