நீலகிரி மாவட்ட காவல்துறை மற்றும் உதகமண்டலம் நகராட்சி இணைந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா - உதகை நகராட்சி ஆணையாளர் ஸ்டான்லி பாபு ஆகியோர் தலைமையில் அரசு தாவரவியல் பூங்கா நுழைவாயிலில் இருந்து மதுவானா சந்திப்பு - கோத்தகிரி சாலை - சேரிங்கிராஸ் ஆடம்ஸ் நீருற்று வரை பிளாஸ்டிக் மாஸ் கிளீனிங் பணியில் ஈடுபட்டனர். 

https://youtu.be/lDE-sBJ9Wy0

தூய்மை பணியில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் மணிகண்டன் - சௌந்தர்ராஜன் நகராட்சி நகர் நல மருத்துவ அலுவலர் சிபி காவல்துறையினர் - தூய்மை பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர். 
இனி வரும் நாட்களில் மாதத்தில் ஒரு நாள் நகராட்சியுடன் இணைந்து காவல்துறையினர் பிளாஸ்டிக் மாஸ் கிளீனிங் தூய்மை பணியில் ஈடுபட உள்ளாக தெரிவிக்கப்பட்டது.
பொதுமக்கள் - வியாபாரிகள் - சுற்றுலா பயணிகள் நீலகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என்று  மாவட்ட காவல்துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் சார்பாக கேட்டுக் கொண்டனர்.