நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சிக்குட்பட்ட 18 வது வார்டு  பகுதியில் சுமார் 500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

https://youtu.be/iiKYFrk48fA

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள சில குடியிருப்புகளில் கழிவு நீர் கலந்த குடிநீர் வந்ததாக 18 வது வார்டு நகரமன்ற உறுப்பினர் முஸ்தபா அவர்களிடம் அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். 

ஆதனை தொடர்ந்து நகராட்சி அதிகாரிகளுடன்  18 வது வார்டு நகரமன்ற உறுப்பினர் முஸ்தபா ஆய்வு மேற்கொண்டு குடிநீரை ஆய்வுக்கு அனுப்பிவைத்ததுடன் அப்பகுதியில் குடிநீர் குழாய் இணைப்புகள் சரிபார்க்கப்பட்டு மீண்டும் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டது. 

இந்நிலையில் மீண்டும் இன்று காலை வந்த குடிநீரில் கழிவு நீர் கலந்து வந்ததாக அப்பகுதி மக்கள் நகரமன்ற உறுப்பினரிடம் தெரிவித்துள்ளனர் 

ஆதனை தொடர்ந்து தற்போது 18 வார்டு பகுதியில் உள்ள அனைத்து குடிநீர் இணைப்பு குழாய்களை ஆய்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது 

மேலும் அப்பகுதில் உள்ள அனைத்து கழிவு நீர் கால்வாய் வழியே செல்லும் குழாய்கள் மற்றும் மழை நீர் கால்வாய்யில் செல்லும் குழாய்கள் குறித்த 18 வது  வார்டு நகர மன்ற உறுப்பினர் முஸ்தபா, நகராட்சி பொறியாளர் சேகரன் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு அப்பகுதி மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.