நீலகிரி மாவட்டத்தின் சுற்று சூழலை பாதுகாக்கும் வகையில் 19 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அப்படி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் வணிக வளாகங்களில் பயன்பாட்டில் உள்ளதா? மற்றும் சுற்றுலா பேருந்துகளில் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை பயணிகள் கொண்டு வருகிறார்களா? என நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணர் அவர்கள் தொடர்ந்து நேரடியாக களத்தில் இறங்கி ஆய்வு செய்து வருகிறார்
இந்நிலையில் இன்று ஊட்டி நகராட்சி மார்க்கெட் பகுதியில் உள்ள கடைகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு அவர்கள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? என ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது உதகை நகராட்சி ஆணையாளர் ஸ்டான்லி பாபு, வருவாய் கோட்டாட்சியர் சதீஷ், வட்டாட்சியர் சங்கர் கணேஷ், நகர் நல மருத்துவர் அலுவலர் சிபி மற்றும் வருவாய்த் துறையினர் - நகராட்சி மேற்பார்வையாளர்கள் ஆகியோர் உடனிருந்தும் ஆய்வு மேற்கொண்டு பிளாஸ்டிக் பயன்படுத்திய கடைகளில் இருந்து 12கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து மொத்தமாக ர்.30 ஆயிரம் அபராதம் விதித்து எச்சரித்தனர்.
மேலும் கடைகளில் சேகரமாகும் குப்பைகளை குப்பை கூடைகளில் வைத்து நகராட்சி குப்பை வாகனத்தில் கொடுக்காமல், பொது வெளியில் கொட்டியிருந்த கடைகாரர்களை மாவட்ட ஆட்சியர் எச்சரித்தார்.