நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சிக்குட்பட்ட இரண்டாவது வார்டு கணபதி நகர் பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ளன.
கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக சாலை மற்றும் குடிநீர் உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாமல் இருப்பதாக இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்
இந்நிலையில் இப்பகுதியில் வசிக்கும் மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு இரண்டு கிலோமீட்டர் வனப்பகுதியின் நடுவே அமைந்துள்ள குண்டும், குழியுமாக காட்சியளிக்கும் சாலை வழியாக சென்று வருவதாகவும்
குறிப்பாக மாலை நேரங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளை முடித்து வரும் மாணவர்கள் இந்த வனச்சாலையில் புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகளின் அச்சுறுத்தல்களுக்கு இடையே நடந்து வர வேண்டிய நிலை உள்ளதாக கூறும் அவர்கள்
கர்ப்பிணி பெண்கள் மற்றும் முதியவர்கள் உடல்நிலை பாதிப்படைந்தால் அவசர தேவைகளுக்கு ஆம்புலன்ஸ் வாகனங்கள் வர முடியாத நிலை உள்ளதால் தொட்டில் கட்டி தூக்கி செல்லும் அவல நிலை உள்ளது.
இந்நிலையில் இப்பகுதியில் வசிக்கும் உடல்நலம் பாதிப்படைந்த முதியவர் சாலை வசதி இல்லாததால் அப்பகுதி மக்கள் தொட்டில் கட்டி தூக்கி சென்றனர்.
தோடர்ற்து உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களை தொட்டில் கட்டி தூக்கி செல்லும் அவல நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது. எனவே
இது தொடர்பாக தங்கள் கிராமப் பகுதிக்கு சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டுமென மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளார்