நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் கேரள மன்னார் பழசி ராஜா ஆங்கிலேயர் காலத்தில் நடத்திய கொரிலா போர் குகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சேரம்பாடியில் உள்ள தனியார் தேயிலை தொழிற்சாலை அருகே கண்டுபிடிக்கப்பட்ட இந்த குகை சுமார் 300 மீட்டர் நீலம் கொண்டது இக்குகையில் சிறிது தூரம் சென்றதும் இரண்டு பாதையிலாக பிரிகிறது. இந்த குகை 1765 கால கட்டத்தில் அமைக்கப்பட்டதாக வரலாற்று சான்றிதழ் கூறுகிறது .
இந்த குகையயை காண பழசு ராஜாவின் ஆறாவது தலைமுறையான பழசு ராஜாவின் கொள்ளுப்பேத்தி சுபா வர்மா அவரது கணவர் கிஷோர் ஆகியோர் அமெரிக்காவிலிருந்து வந்திருந்தனர்
மேலும் குகையை திறந்து வைத்து குகையில் வைக்கப்பட்டுள்ள பழசிராஜாவின் உருவப்படத்திற்கு முன் விளக்கு ஏற்றி வழிபட்டனர்.
இந்த குகையை பார்க்க பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க வேண்டும் எனவம் அதனை சுற்றுலா தளமாக மாற்ற வேண்டும் எனவும் பொது மக்கள் கோறிக்கை விடுத்துள்ளனர்.