நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வெளி மண்டல வனப் பகுதியில் அமைந்துள்ள சொக்கநல்லி கிராமத்தை சேர்ந்தவர் ராமன் வயது 57. இவர் நேற்று (3.3.2025) இரவு ஆணிக்கள் மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற திருவிழாக்கு வனப்பகுதி வழியாக நடந்து சென்றுள்ளார்.

https://youtu.be/Y77U1mTH-2A

அப்போது வனப்பகுதியில் இருந்த ஒற்றைக் காட்டு யானை இவரை துரத்தி தாக்கியுள்ளது இதில் ராமன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை அடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் காட்டு யானையை விரட்டி ராமனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கூடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இந்நிலையில் கோவில் திருவிழாவிற்கு சென்ற பக்தர் காட்டு யானை தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.