இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நிகழ்வை புனித வெள்ளி தினமாகவும். சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்த நாளிலிருந்து. 3-வது நாள் அவர் உயிர்தெழுந்த தினத்தை ஈஸ்டர் பண்டிகையாகவும் உலகம் முழுவதிலும் உள்ள கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகின்றனர்.
https://youtu.be/YtKICmR5nYc
இயேசுவின் சிலுவை பாடுகளை நினைவு கூரும் வகையில் 40 நாட்களை தவக்காலமாக கடைபிடிக்கிறார்கள். அந்த வகையில் 40 நாட்கள் தவக்காலம் நிகழ்வு சாம்பல் புதனுடன் இன்று தொடங்கியது.
உதகை திரு இருதய ஆண்டவர் பேராலயத்தில் உதகை மறை மாவட்ட ஆயர் அமுல் ராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் உலகத்தின் அமைதிகாக்கும், கத்தோலிக்க கிறிஸ்தவரிகளின் தலைவர் போப் அவர்களின் உடல் நிலைக்கவும் பொது தேர்வுகளை எழுதும் மாணவ, மாணவிகளுகவும் சிறப்பு பிராத்தனை மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து இன்று நடைபெற்ற சாம்பல் புதன் சிறப்பு திருப்பலியில் பங்கு மக்கள் நெற்றியில் திருஇருதய ஆண்டர் பேராலயத்தின் பங்கு தந்தை ரவி லாரன்ஸ் உதவி பங்குதந்தை, அருட்சகோதரிகள் சாம்பலில் சிலுவை அடையாளம இட்டு தவக்காலத்தை தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்வில் கிறிஸ்தவ மக்கள் நூற்றுக்கணக்கானோர் பக்தியுடன் கலந்து கொண்டனர்.
சாம்பல் புதன் வழிபாடுடன் கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியது
